அவரது பண்புகள்His values

CHRISTOPHER — டாக்டர் எம். கிறிஸ்டோபரின் பண்புகள் · The values of Dr. M. Christopher

இது ஒரு பெயர் அல்ல… ஒரு வாழ்க்கையின் வரலாறு!Not just a name… the story of a life!

அவருடைய பெயரில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும், அவருடைய வாழ்க்கையில் இருந்த ஒரு மிகப்பெரிய குணத்தைச் சொல்கிறது. அவர் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களோடு, பதினொரு பண்புகள்.Every letter of his name speaks of a great quality in his life. Eleven virtues, told through true stories from his life.

Dr. M. Christopher standing tall with an award rosette
C · COURAGE
CCOURAGE01 / 11

துணிவுCourage

அநீதியைப் பார்த்து அமைதியாக இருப்பது அவருக்குத் தெரியாது. அவர் வாழ்க்கையில் “யாராவது செய்வார்கள்” என்ற வார்த்தைக்கு இடமே இல்லை.

He never knew how to stay silent in the face of injustice. In his life there was no room for “someone else will do it.”

போராட்டமா?A struggle?முன்னால் நிற்பார்.He stood in front.
அநீதியா?Injustice?குரல் கொடுப்பார்.He spoke up.
வழக்கா?A wrong to set right?நீதிமன்றம் செல்வார்.He went to court.
தடையா?An obstacle?அதை உடைப்பார்.He broke through it.

நியாயம் என்றால்… நான் நிற்பேன்!If it is right… I will stand for it!

— Dr. M. கிறிஸ்டோபர்— Dr. M. Christopher

தடைகளைத் தகர்த்து, போராட்டங்களை வென்று, தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நின்ற சிங்கம்.A lion who broke barriers, won his battles and stood tall in self-belief.

Dr. M. Christopher smiling warmly
H · HUMANITY
HHUMANITY02 / 11

மனிதநேயம்Humanity

வசதி வந்தால் சிலர் தங்களை உயர்த்திக்கொள்வார்கள். ஆனால் Dr. M. கிறிஸ்டோபர் தன்னை உயர்த்திக்கொள்ளவில்லை — மற்றவர்களை உயர்த்தினார்.

When comfort comes, some people raise themselves up. Dr. M. Christopher did not raise himself — he raised others.

ஏழையா?Someone poor?அழைத்து வருவார்.He welcomed them in.
தொழிலாளியா?A labourer?அருகில் உட்கார வைப்பார்.He sat them beside him.
காவலாளியா?The security guard?“நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டீங்களா?” என்று கேட்காமல் போகமாட்டார்.He never passed by without asking, “Are you well? Have you eaten?”

அவருடைய நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக இருந்தாலும், எளிய பணியாளராக இருந்தாலும் — யாரையும் தனக்கு முன்னால் நிற்கவைத்துப் பேசமாட்டார்.

In his institutions, senior officer or humblest worker, he never kept anyone standing while he spoke to them.

நம்முடைய உயரம், மற்றவர்களை எவ்வளவு உயரமாக நடத்துகிறோம் என்பதில்தான் தெரியும்.Our own height shows in how highly we treat others.

— Dr. M. கிறிஸ்டோபர்— Dr. M. Christopher
Dr. M. Christopher in a mustard shirt
R · REFORMER
RREFORMER03 / 11

மாற்றத்தை உருவாக்கியவர்Reformer

அவர் மாற்றத்தைப் பற்றிப் பேசவில்லை; மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வாழ்க்கையை வாழ்ந்தார்.

He did not talk about change; he lived a life that showed it.

1984 · நெல்லிக்குப்பம்1984 · Nellikuppam

புது வீட்டில் ஒரு இறுதி மரியாதைA farewell in a brand-new house

நெல்லிக்குப்பத்தில் புது வீடு கட்டிக் குடிபோய் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அது ஒரு மழைக்காலம். வயதான உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய மகள் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. இறந்தவரின் வீடு ஒரு குறுகிய சந்துக்குள் இருந்ததால், மழையில் ஆசிரியர்கள் வந்து அஞ்சலி செலுத்துவது கடினம் என்று அவர் நினைத்தார்.

அவர் என்ன செய்தார் தெரியுமா? தன் புது வீட்டிலேயே அந்த உடலைக் கொண்டு வந்து வைத்தார். “புது வீட்டிலேயே பிணமா?” என்று ஊர் மக்கள் பதறினார்கள், தடுத்தார்கள். ஆனால் அவர் பார்த்தது மக்களின் பேச்சை அல்ல — மனிதர்களின் சிரமத்தை.

Barely a month after he moved into his newly built house in Nellikuppam, during the rainy season, an elderly relative passed away. The relative's daughter was a government school teacher, and the family home stood in a narrow lane where her colleagues would struggle to come and pay their respects in the rain.

So what did he do? He brought the body to his own new house. The village was alarmed — a body in a brand-new home? — and tried to stop him. But he was not listening to what people would say; he was looking at what people were going through.

சமூகம் கட்டியிருந்த தேவையற்ற வேலிகளை அவர் ஒவ்வொன்றாக உடைத்தார். பழைய பாதையில் நடந்தவர் அல்ல — புதிய பாதையை உருவாக்கியவர்!One by one he broke down the needless fences society had built. He did not walk the old road — he made a new one!

Dr. M. Christopher thinking, hand on chin
I · INTELLECTUAL
IINTELLECTUAL04 / 11

அறிவுப் பொக்கிஷம்Intellectual

பேச்சா?His speech?அறிவு.Knowledge.
எழுத்தா?His writing?சிந்தனை.Thought.
சட்டமா?The law?நுணுக்கம்.Precision.
கல்வியா?Education?ஆழம்.Depth.
கட்டிடமா?Buildings?பொறியாளரின் திறமை.An engineer's skill.
மர வேலையா?Woodwork?தச்சரின் நுட்பம்.A carpenter's craft.

எதைச் செய்தாலும் மேல்மட்டத்தில் நின்றுவிடமாட்டார்; “இதன் நுணுக்கம் என்ன?” என்று உள்ளே சென்று தெரிந்துகொள்வார். பொறியாளரின் துணையின்றி, தன் வீட்டையும் நிறுவனக் கட்டிடங்களையும் தாமே திட்டமிட்டு வடிவமைத்தார். செய்தித்தாளை ஒரு வரி கூட விடாமல் படிப்பார்; புத்தகம் படிப்பது அவரது தினசரிப் பழக்கம். உலகம் என்ன செய்கிறது, ஏன் செய்கிறது என்று தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பார். வயது முதிர்ந்தாலும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்துக்கு முடிவே இல்லை.

Whatever he did, he never stopped at the surface; he went in to understand how it really worked. Without an engineer, he planned and designed his own home and his institutions' buildings. He read the newspaper without skipping a line, and reading books was a daily habit. He kept learning what the world was doing and why. His years grew; his hunger to learn never ended.

அவர் ஒரு அறிவாளி மட்டுமல்ல — ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்!More than a learned man — a walking encyclopaedia!

Dr. M. Christopher speaking with a warm gesture
S · SELFLESS
SSELFLESS05 / 11

தனக்கென வாழாதவர்Selfless

அவர் பாக்கெட்டில் பணம் இருந்தால் அது நீண்ட நேரம் அங்கே இருக்காது; யாருக்காவது தேவை என்றால் அவர்களிடம் போய்ச் சேரும். ஒரு கிராமத்துக்குப் போனால் “எத்தனை பேர் வருவார்கள்?” என்று கேட்கமாட்டார்; “எத்தனை பேருக்குக் கொடுக்க வேண்டும்?” என்றுதான் எண்ணுவார். வசதியானவரோ, ஏழையோ — அவருடைய பார்வையில் மனிதன் என்ற ஒரே அடையாளம்.

Money never stayed long in his pocket; if someone needed it, it went to them. Visiting a village, he never asked how many people would come — only how many he should give to. Rich or poor, in his eyes everyone carried one identity: a human being.

“என்னிடம் என்ன இருக்கிறது?” என்று அவர் கேட்டதில்லை; “என்னால் இன்னொருவருக்கு என்ன செய்ய முடியும்?” என்றுதான் கேட்டார்.

He never asked “What do I have?” He asked, “What can I do for someone else?”

“இவ்வளவு வசதியானவர்களுக்குக்கூட ஏன் கொடுக்கிறீங்க?”“Why do you give even to people who are well off?”புன்னகையோடு: “அப்படியே பழகிட்டேன்ப்பா…”With a smile: “That's just how I am, son…”

அது பழக்கம் அல்ல — அது அவரது இயல்பு.

It was not a habit — it was his nature.

பணம் சேர்ப்பதைவிட மனிதர்களைச் சேர்க்கணும். கடவுளுடைய ராஜ்யத்தைத்தான் நாம் கட்டணும்.Gather people, not money. It is God's kingdom we must build.

— Dr. M. கிறிஸ்டோபர்— Dr. M. Christopher

அவர் சேர்த்து வைத்தது பணமல்ல… மனிதர்கள்!What he gathered was not money… but people!

Dr. M. Christopher at his office in Perambalur
T · TRAILBLAZER
TTRAILBLAZER06 / 11

பாதை போட்ட முன்னோடிTrailblazer

உயர்கல்வி எல்லோருக்கும் எட்டாத காலத்தில் அவர் பெரம்பலூரில் விதைத்த கல்வி விதை, இன்று எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கைக்குப் பாதையாக வளர்ந்திருக்கிறது.

At a time when higher education was out of most people's reach, he planted a seed of learning in Perambalur. Today it has grown into a road for countless students' lives.

இன்று பெரம்பலூர் கல்வியில் முன்னேறி நிற்கிறது என்றால், அவர் விதைத்த முதல் விதையும் அதற்கு ஒரு காரணம்.

If Perambalur stands tall in education today, the first seed he sowed is one of the reasons.

அவர் அந்தப் பாதையில் சென்ற பிறகுதான், அது ஒரு புதிய பாதை என்று மற்றவர்களுக்குத் தெரிந்தது!Only after he walked that road did others realise it was a road at all!

— Dr. M. கிறிஸ்டோபர்— Dr. M. Christopher
Dr. M. Christopher speaking on stage
O · OUTSTANDING
OOUTSTANDING07 / 11

தனித்துவமானவர்Outstanding

சிலர் ஒரு கூட்டத்தில் இருப்பார்கள். ஆனால் Dr. M. கிறிஸ்டோபர் ஒரு கூட்டத்திற்கு வந்தால், கூட்டமே அவரைக் கவனிக்கும்!

Some people are simply in a crowd. When Dr. M. Christopher arrived, the crowd turned to him!

திருச்சபையா?The church?கிறிஸ்டோபர்!Christopher!
பேச்சாளர்களின் சங்கமமா?A gathering of speakers?கிறிஸ்டோபர்!Christopher!
பாட்டு, நாடகம், நடிப்பு, இசை?Song, drama, acting, music?எல்லாவற்றிலும் தனித்துவம்!Outstanding in all of them!

மேடையில் அவர் காட்டிய அந்த ஈர்ப்பு பயிற்சியால் வந்ததல்ல; கடவுள் இயற்கையாகக் கொடுத்த வரம். அதுவே அவரது வசீகரம்.

The pull he had on a stage did not come from training; it was a natural gift from God. That was his charm.

அவர் ஒரு கூட்டத்தில் கலந்து போனவர் அல்ல — கூட்டம் நினைவில் வைத்துக்கொள்ளும் மனிதர்!He never blended into a crowd — he was the one the crowd remembered!

Dr. M. Christopher in an orange shirt
P · PRINCIPLED
PPRINCIPLED08 / 11

கொள்கையாளர்Principled

அவர் வாழ்க்கையில் ஒரு விஷயம் மட்டும் பேரம் பேசப்படவே இல்லை — அது கொள்கை!

One thing in his life was never up for bargaining — his principles!

தன்னைப்போல் பிறரையும் நேசி… பிறருக்காக யோசி… பிறருக்காக யாசி!Love others as yourself… think for others… ask on behalf of others!

— Dr. M. கிறிஸ்டோபர்— Dr. M. Christopher
ஒரு சம்பவம்A true story

பல லட்சம் ரூபாய் — ஒரு பெண்ணின் வாழ்க்கைLakhs of rupees, and one young woman's life

ஒருவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் பணம் வாங்கினார். அப்படியே சேர்ந்து அது பல லட்சம் ரூபாய் ஆனது. அந்தப் பணத்தைக் கொண்டு அவருடைய மகளுக்குத் திருமணம் நடந்தது என்று தெரிந்தபோது அவர் சொன்னார்:

“பரவாயில்லை… அந்தப் பணத்தால ஒரு பெண்ணோட வாழ்க்கை நல்லா அமைஞ்சிருச்சில்ல… அதுவே போதும்.” கடைசி வரை அந்தப் பணத்தை அவர் திரும்பக் கேட்கவில்லை.

One man kept borrowing from him, a little at a time, with a new reason each time, until it added up to several lakh rupees. When he learned that the money had paid for the man's daughter's wedding, he said:

“Never mind… that money gave a young woman a good life, didn't it? That is enough.” He never asked for it back.

இழந்த பணத்தை அவர் கணக்கிடவில்லை; பிறர் வாழ்வில் வந்த நன்மையையே கணக்கிட்டார்.He never counted the money he lost; he counted the good it brought to someone's life.

Dr. M. Christopher with a ceremonial shawl and a book
H · HOPE
HHOPE09 / 11

நம்பிக்கைHope

அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தவர் மட்டுமல்ல — மற்றவர்களுக்கே நம்பிக்கை ஊட்டியவர்!

He did not only live with hope — he gave hope to others!

கர்த்தர் வெறுமையிலிருந்துதான் உலகத்தைப் படைத்தார். கையில் எல்லாம் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதில்லை… நம்பிக்கையோடு தொடங்கணும்.The Lord created the world out of nothing. You don't need everything in hand to begin… begin with hope.

— Dr. M. கிறிஸ்டோபர்— Dr. M. Christopher
வேலூர்Vellore

ஒரு மெடல் — ஒரு நிறுவனத்தின் அடையாளம்One medal, one institution's emblem

சிறுவனாக வேலூரில் ஒரு கல்லூரி வளாகத்தில் இருந்தபோது, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பேசினார்; அந்தப் பேச்சுக்கு ஒரு மெடல் கிடைத்தது. பிற்காலத்தில் அதுவே ஒரு நிறுவனத்தின் அடையாளமாக மாறியது. அதன் தாரக மந்திரம்: “ஜெபி · நேசி · செயல்படு.”

As a boy on a college campus in Vellore, he seized a chance to speak and won a medal for it. Years later that medal became the emblem of an institution, with its motto: “Pray · Love · Act.”

20022002

இதயம் எச்சரித்தது; நம்பிக்கை நடத்தியதுHis heart warned him; his hope led him on

2002-ல் இதயத்தின் மூன்று வால்வுகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர் ஒரு இதய நோயாளி என்று யாருமே அறிய முடியாத அளவுக்குச் சுறுசுறுப்பாக இருந்தார். அந்தக் கவலையை மனதில் சுமக்கவில்லை; எந்த அறுவை சிகிச்சையும் இன்றி, பல ஆண்டுகள் கம்பீரமாக வாழ்ந்தார்.

உடல்நிலை சரியில்லாத நேரத்தில்கூட “எப்படி இருக்கீங்க?” என்று கேட்டால், “நல்லா இருக்கேன்!” என்று புன்னகையோடு சொல்லுவார்.

In 2002, blockages were found in three of his heart valves. Yet he was so active that no one would have guessed. He never carried the worry in his mind and, without any surgery, went on living with dignity for many years.

Even when he was unwell, if you asked how he was, he would smile and say, “I'm doing well!”

அந்த ஒரு வார்த்தை சொன்ன செய்தி: பிரச்சனையைப் பார்த்து பயப்படாதே — பிரச்சனையைவிடப் பெரிய நம்பிக்கை உன்னிடம் இருக்கட்டும்!That one reply carried a message: don't fear the problem — let your hope be bigger than it!

Dr. M. Christopher on the phone
E · ENERGETIC
EENERGETIC10 / 11

எப்போதும் துடிப்புடன்Energetic

அவருடைய வேகத்தைப் பார்த்தால் அவருடைய வயதைக் கணக்கிடவே முடியாது. கிடுகிடுவென்று நடப்பார். கைப்பிடித்து அழைத்துச் செல்ல யாராவது வந்தால், “நான் நடந்துக்குவேன்!” என்பார்.

Watching his pace, you could never guess his age. He walked briskly, and if anyone offered a hand to help him along, he would say, “I can walk on my own!”

வயதில்?In years?முதியவர்.An elder.
சிந்தனையில்?In thought?இளமை!Young!
செயலில்?In action?வேகம்!Quick!

வயது முதிர்ந்த காலத்திலும் திருச்சபையின் மாற்றத்துக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். அவர் இருக்கும் இடத்தில் உற்சாகமும் நேர்மறை ஆற்றலும் நிறைந்திருக்கும். உடல்நிலை சரியில்லாவிட்டாலும் ஒருபோதும் தளர்ந்து போகமாட்டார்.

Even in his later years he was a guiding star for change in the church. Wherever he was, there was enthusiasm and positive energy. Even when unwell, he never let himself slow down.

அவருடைய ஆற்றல் உடம்பிலிருந்து வந்ததல்ல — மனதிலிருந்து வந்தது!His energy did not come from his body — it came from his mind!

Dr. M. Christopher, determined, deep in thought
R · RESILIENT
RRESILIENT11 / 11

விழுந்தாலும் எழுபவர்Resilient

வாழ்க்கை அவரைத் தள்ளியதுLife pushed him downஅவர் எழுந்தார்.He got up.
வாழ்க்கை அவரைத் தடுத்ததுLife blocked his wayமீண்டும் நடந்தார்.He walked on.
ஒரு கதவு மூடியதுA door closedமற்றொரு கதவைத் தேடினார்.He looked for another.
அதுவும் மூடியதுThat one closed tooகதவையே மாற்றினார்!He changed the door!

அவருக்கு வெற்றி என்பது தோல்வியே இல்லாத வாழ்க்கை அல்ல; தோல்வி வந்தாலும் அதை முடிவாக ஏற்றுக்கொள்ளாத வாழ்க்கை.

For him, success was not a life without failure; it was a life that never accepted failure as the end.

1995 → 20231995 → 2023

முப்பது ஆண்டுப் போராட்டம்A thirty-year fight

1995-ல் பணி ஓய்வு பெற்றும் ஓய்வூதியப் பலன் கிடைக்கவில்லை. 2017-ல் விண்ணப்பித்தார், காத்திருந்தார், பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். 2023-ல் நீதிமன்றத்தை நாடினார். “முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, இனி ஜெயிக்க முடியாது” என்று எல்லோரும் சொன்னார்கள்.

உடல் சோர்ந்த நேரத்திலும் மனம் சோரவில்லை; படுக்கையில் இருந்த நேரத்திலும் போராட்டம் நிற்கவில்லை. இறுதியில் வெற்றி வந்தது — ஓய்வூதியப் பலன் அவர் கைகளில் வந்து சேர்ந்தது.

He retired in 1995, but his pension benefits were never paid. In 2017 he applied, waited, and met resistance at every turn. In 2023 he went to court. Everyone said that after nearly thirty years he could never win.

His body tired, but his spirit did not; even from his bed, the fight went on. In the end, victory came — the pension finally reached his hands.

நான் தொடங்கியதை முடித்துவிட்டேன்!I have finished what I began!

— Dr. M. கிறிஸ்டோபர்— Dr. M. Christopher

அவர் தொடங்கிய பணி தொடர்கிறது.The work he began goes on.

அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்களின் ஒவ்வொரு மாணவரிலும், ஒவ்வொரு ஆசிரியரின் பணியிலும் அவருடைய கனவு தொடர்ந்து வாழ்கிறது.His dream lives on in every student and in the work of every teacher at the institutions he built.